search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைந்தது"

    • மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு கடல் மீன்கள் விற்கப்படு கின்றன. தூத்து க்குடி, நாகப்பட்டினம், காரை க்கால், கேரளா, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்க சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வரும். ஏனெனில் ஆடி மாதம் காரணமாக கடந்த சில வாரமாக மீன்கள் விற்பனை மந்த நிலையில் இருந்தது.

    ஆனால் இன்று மீன்கள் வரத்து அதிகரித்து விலையும் குறைந்ததால் வியா பாரம் கடந்த வாரத்தை விட விறு விறுப்பாக நடைபெற்றது.

    இன்று மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மீன் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் கிலோ ரூ.50 முதல் ரூ.150 வரை விலை குறைந்து காணப்பட்டது. ரூ.1,200-க்கு விற்கப்பட்ட வஞ்சரம் இன்று கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.800-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் 550 ரூபாய்க்கு விற்கப்பட்ட விளாமீன் 450-க்கும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை 450-க்கும், 450-க்கு விற்க ப்பட்ட சீலா 350-க்கும், 650-க்கு விற்கப்பட்ட நண்டு 500 ரூபாய்க்கும், 450-க்கு விற்க ப்பட்ட பொட்டு நண்டு 350-க்கும், 350-க்கு விற்கப்பட்ட அயிலை 300 ரூபாய்க்கும்,

    700 ரூபாய்க்கு விற்கப்பட்ட இறால் 650-க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளை வாவல் 600 ரூபா ய்க்கும், 650-க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட மயில் மீன் 600 ரூபாய்க்கும், 600-க்கு விற்கப்பட்ட கிளி மீன் 500-க்கும், 350-க்கு விற்கப்பட்ட நெத்திலி 250-க்கும் விற்கப்பட்டது.

    இதேப்போல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-கேரளா மத்தி-250, சின்ன இறால்-500, திருக்கை -300, சூரி-300-க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் போன வாரம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது. 

    • பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
    • பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா

    பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சானார்பாளையம், நகப்பாளையம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    பூக்கள் பூக்கும் தருவாயில் வந்த போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலை களாகவும் ,தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்கின்றனர். சில வியா பாரிகள் உதறிப் பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகி றது. தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள் ளது. அதனால் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமானது.

    நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்பனை யான சம்பங்கி 120 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.

    அதேபோல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை யானது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதா வது:- கடந்த வாரம் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. மேலும் இப்போது வெயில் சுட்டெ ரிப்பதால், பூக்களின் விளைச்சல் அதி கரித்துள்ளது.

    வெயில் அதிகமாக அடிக்கும்போ து, பூக்களின் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், தற்போது பூக்களின் வர த்து அதிகமாகியுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்களில், பூக்களின் விலை அதி கரிக்கும் என எதிர்க்கப் படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சத்துணவு திட்டத்திற்கு தவிர மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. 3-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.20 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.105 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.90 ஆக குறைந்தது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.78 ஆக நீடிக்கிறது.

    • கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.

    கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.

    பின்னர் நாள்தோறும் 5 பைசா வீதம் உயர்வடைந்து கடந்த 17-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.65 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    அகில இந்திய என்.இ.சி.சி அறிவிப்பின்படி, இன்னும் 3 நாட்களுக்கு முட்டை விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை விறுவிறுப்பாக இருப்பதால், பண்ணையாளர்கள் யாரும் என்.இ.சி.சி விலையைவிட குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும், மண்டல என்.இ.சி.சி. துணைத்தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-520, பர்வாலா-375, பெங்களூரு-505, டெல்லி-418, ஐதராபாத்-455, மும்பை-515, மைசூரு-512, விஜயவாடா-440, ஹொஸ்பேட்-465, கொல்கத்தா-460.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.93 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக சிகா நிர்ணயித்து உள்ளது.

    • 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது.
    • மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 4,450 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,576 கிலோவாக குறைந்தது. இதேபோல் நேற்று முன்தினம் ரூ.556-க்கு விற்பனையான 1 கிலோ பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.36 விலை குறைந்தது.

    அதன்படி பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.520-க்கும், குறைந்த பட்சமாக ரூ.300-க்கும், சராசரியாக ரூ.421.04-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.15 லட்சத்து 5ஆயிரத்து 850-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • 1,017 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 772 கிலோவாக குறைந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 87-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,017 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 772 கிலோவாக குறைந்தது.

    நேற்று முன்தினம் 1 கிலோ அதிகபட்சமாக ரூ.509-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.29 குறைந்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.480-க்கும், குறைந்த பட்சமாக ரூ.224-க்கும், சராசரியாக ரூ.414.35-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 87-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.
    • மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடு களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,117 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,193 கிலோவாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 விலை குறைந்தது.

    நேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.448-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.365.72-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 812-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    ஈரோடு, ஜூன். 9-

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.

    இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

    வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.

    ஈரோட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வழக்கம் போல் இன்றும் குறைந்தது. தொடர்ந்து விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.10-க்கு விற்கப்பட்டது. இன்று 22 பைசா குறைக்கப்பட்டு ரூ.74.88-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.70.86-க்கு விற்கப்பட்டது. இன்று 37 பைசா குறைந்து ரூ.70.57-க்கு விற்கப்பட்டது.

    தொடர்ந்து பெட்ரோல் -டீசல் விலை வீழ்ச்சி, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புரட்டாசி மாதத்தில் பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதால் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்து உள்ளது. #Purattasi
    சென்னை:

    புரட்டாசி மாதத்தை புனித மாதமாக கருதி வழிபடுகிறார்கள். குறிப்பாக பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடித்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை தவிர்த்து சைவ உணவு வகைகளையே சாப்பிடுகிறார்கள்.

    இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனை இல்லாததால் அவற்றின் விலை குறைந்துள்ளது.

    புரட்டாசி மாதம் தொடங்கிய பிறகு சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மீன் மொத்த விற்பனை விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை குறைந்துவிட்டது.

    இதுபற்றி தென் இந்திய மீனவர்கள் நல சங்க தலைவர் கே.பாரதி கூறுகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சராசரியாக நாள்தோறும் 150 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதே அளவுக்கு மீன்கள் வரத்து இருந்தாலும் சில்லரை வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வாங்கிச்செல்கின்றார்கள். புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை குறைந்துவிட்டது’’ என்றார்.

    சில்லரை விற்பனையில், பாறை மீன் கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. தற்போது ரூ.120 ஆக குறைந்துள்ளது. ரூ.300 ஆக இருந்த ஷீலா மீன் ரூ.120 ஆகவும், பெரிய வஞ்ஜிரம் கிலோ ரூ.1000த்தில் இருந்து ரூ.500 ஆகவும், சிறிய வஞ்ஜிரம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.300 ஆகவும், நெத்திலி மீன் ரூ.200 ஆகவும் விற்றது ரூ.100 ஆகவும் குறைந்துள்ளது.

    சென்னையில் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை குறைந்துவிட்டதுபோல் வீடுகளில் நேரடியாக மீன் விற்பனை செய்வதும் குறைந்துவிட்டது.

    இதுபற்றி மீன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் குறைந்துவிட்டது. தினமும் 3 கூடை மீன்கள் காசிமேட்டில் இருந்து வாங்கிச் சென்று வீடுகளில் விற்பனை செய்தேன். இப்போது 2 கூடை மீன்கள் கூட விற்பனையாவது இல்லை. விலையை குறைத்து கொடுத்தாலும் வாங்கும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்றார்.

    இதேபோல் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்துவிட்டது. ஆட்டுக்கறி சில்லரை விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ஓட்டல்களுக்கு வழக்கம் போல் பிராய்லர் சிக்கன் உயிருடன் சப்ளை செய்கிறோம். ஆனால் அவற்றின் விலை 2 வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 குறைந்துவிட்டது. ரூ.220 ஆக விற்ற பிராய்லர் சிக்கன் ரூ.180 ஆக குறைத்து கொடுக்கிறோம். ஆனால் ஆட்டுக்கறி விலை சிறிதளவே குறைந்து இருக்கிறது. ஆடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறைந்து விட்டது. இதனால் அதன் தேவை அதிகரித்து இருப்பதால் விலை குறையவில்லை என்றார்.

    ஆட்டுக்கறி சென்னையில் பல இடங்களில் கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பிரியாணி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது. அதே சமயம் சைவ ஓட்டல்களில் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சைவ ஓட்டல்களில் கூட இருமடங்கு விற்பனை கூடியுள்ளது. #Purattasi

    ×